Home இலங்கைகாவல்துறை திணைக்களம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது

காவல்துறை திணைக்களம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காவல்துறை திணைக்களம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது என காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இலங்கைக் காவல்துறை பல்வேறு நெருக்கடி நிலைமைகளை சந்தித்திருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்திட்டிய பிரதேசத்தில் காவல்துறை பல்கலைக்கழகமொன்றை அமைக்கும் நடவடிக்கை ஒரு தொலைபேசி அழைப்பின் ஊடாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பதவி வகித்த முக்கியஸ்தர் ஒருவரின் உத்தரவினால் இவ்வாறு நிர்மானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தங்களது உயர் கல்வியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் எனவும் இதன் ஊடாக சமூகத்திற்கே நன்மை கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More