138
காஷ்மீரில் இளைஞர்கள் ஆயுதங்களைத் துறந்து சரணடைய விரும்பினால் 1441 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம் என மத்திய ரிசர்வ் போலீஸ் படை அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களைத் தீவிரவாத பாதைக்கு செல்வதை தடுக்கவும், அவர்களை சமூகத்தோடு இணைந்து செயல்படவும் வைக்கும் நோக்குடனும் இந்திய மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சரணடையும் இளைஞர்களின் மறுவாழ்வுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமுல்படுத்தி வருகின்ற நிலையிலேயே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Spread the love