கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில் கட்டிட உரிமையாளருக்கு சுமார் 6 லட்சத்து 25 ஆயிரம் பவுண்ட்களை நட்டஈடாக வழங்க விமான நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் திகதி அல்-காய்தா தீவிரவாதிகள், பயணிகள் விமானங்களைக் கடத்தி வந்து மோதி தாக்குதல் நடத்தியதுடன் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும் மற்றொரு விமானத்தை மோதி தாக்குதல் நடத்தினர். மொத்தமாக இந்தத் தாக்குதலில் சுமார் 3,000 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான இரட்டை கோபுரம், நியூயோர்க் மற்றும் நியூஜெர்ஸி துறைமுக கழகத்துக்கு சொந்தமானது. தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இரட்டை கோபுர தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களின் உரிமையாளர்களான, அமெரிக்க எயர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் எயர்ர்லைன்ஸ் நிறுவனங்கள் மீதும் கட்டிடத்தின் உரிமையாளர் வழக்கு தொடர்ந்து நட்டஈடு கோரியிருந்தார். இந்த வழக்கு 17 ஆண்டுகளாக இடம்பெற்று வந்தநிலையில் வழங்க விமான நிறுவனங்கள்நட்ஈட்டினை வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.