Home இலங்கை2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நலன்களை வழங்கும் – அரசாங்கம்

2017ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நலன்களை வழங்கும் – அரசாங்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
2017ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு நலன்களை வழங்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் திகதி  நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த வரவு செலவுத் திட்டம் மக்களின் வரவு செலவுத் திட்டமாகவே அமையும் எனவும் தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கார்பிரேட் துறை, கம்பனிகள் மற்றும் தனிப்பட்ட நபர்களின் கருத்துக்களை உள்ளடக்கிய வகையில் வரவு செலவுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களின் கருத்துக்கள் நேரடியாக கேட்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More