Home இலங்கைதேசிய கொடி விவகாரம் – முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார்

தேசிய கொடி விவகாரம் – முதலமைச்சரிடம் வடக்கு ஆளுநர் விளக்கம் கோரியுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விளக்கம் கோரியுள்ளார் . இவ்விடயம் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சரிடம் கடிதம் மூலம் விளக்கத்தினை ஆளுனர் கோரியுள்ளார்

முதலமைச்சரினால் பரிந்துரைக்கப்பட்டவர் தம் முன்னிலையில் இலங்கையின் அரசியலமைப்பிற்கு கட்டுப்படுவதாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார் எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   இந்நிலையில் அண்மையில் சிங்கள பாடசாலை ஒன்றில் தேசிய கொடி தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் விளக்கமளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான ஆவணங்கள் சிலதும் முதலமைச்சருக்கு ஆளுனரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More