Home உலகம்மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கை முகாமிலிருந்து 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கை முகாமிலிருந்து 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மனுஸ் தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமிலிருந்து சுமார் நாற்பது புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  அவுஸ்திரேலியாவினால் இந்த புகலிடக் கோரிக்கையாளர் முகாம் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.பபுவுh நியூகினி காவல்துறையினர் இந்த புகலிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றியுள்ளனர்.

எனினும், இன்னும் 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்ந்தும் இந்த முகாமில் பலவந்தமாக தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த புகலிடக் கோரிக்கையாளர் முகாம் மூடப்பட்டு சில காலங்கள் கடந்துள்ள நிலையிலும் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி  வருவதாகத் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More