குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்த்தினால் ஆலயம் ஒன்றுக்கு அன்னதான மண்டபம் அமைக்க சங்கத்தின் பொதுச் சபையின் அனுமதி பெற்றே பெரும் தொகை நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் டிசம்பர் ஜந்தாம் திகதி இடம்பெறவுள்ள பொதுச் சபை கூட்டத்திலேயே குறித்த விடயம் அனுமதிக்கு விடப்படவுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிதி அன்பளிப்பானது பொதுச் சபையின் அனுமதியுடன் வழங்கப்பட்டது. என பொது முகாமையாளர் ஊடகங்களுக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளார். ஆனால் டிசம்பர் மாதம் ஜந்தாம் திகதி பொதுச் சபை கூட்டத்திற்கு அனைத்து பொதுச் சபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அறிவித்தலில் உள்ள நிகழ்ச்சி நிரலில் எட்டாவது நிகழ்வு பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு அன்னதானம் மண்டபம் அமைக்க வழங்கப்பட்ட அன்பளிப்பு நிதிக்கான அனுமதிக்கு சமர்பித்தல் ஆகும்.
ஆனால் கடந்த 24.10.201 கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் பாரதிபுரம் முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு ஐந்து இலட்சத்து இருபது ஆயிரத்து 650 ரூபாவை அன்னதானம் மண்டபம் அமைக்க அன்பளிப்பாக வழங்கியது.
இது சங்கத்தின் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் போது பொது முகாமையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தாம் பொதுச் சபையின் அனுமதி பெற்றே நிதியை அன்பளிப்புச் செய்ததாக தெரிவித்திருந்தார். அவ்வாறு பொதுச் சபையின் அனுமதி பெறப்பட்டிருந்தால் டிசம்பர் ஏன் டிசம்பர் மாதம் நடைப்பெறவுள்ள பொதுச் சபையின் கூட்டத்தில் அனுமதிக்கு ஏன் விண்ணபிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள தொழிலாளர்கள்
தாங்கள் நாளாந்தம் பனை தென்னை மரங்களில் ஏறி இறங்கி நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழில் செய்து வருகின்ற போது சஙக நிர்வாகம் இவ்வாறு பெருமளவு நிதியை தொழிலாளர்களின் நலன்களுக்கு அப்பால் அன்பளிப்புச் செய்வது நிதி விரையம் செய்வதற்கு ஒப்பானது எனவும் தெரிவித்துள்ளனா்.
குறித்த நிதி அன்பளிப்புதொடர்பில் தங்களிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளல் திருமதி நல்லதம்பி தெரிவித்துள்ளார். இதேவேளை மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன் தொடர்பு கொண்டு வினவிய போது அனுமதி பெறப்படாது வழங்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.