குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு யுத்தக் குற்றச் செயல் தொடர்பான குற்றச்சாட்டுக்ளுக்கு பதிலளிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தக் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளநிலையில் இந்தக் குற்றறச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபுவின் கருத்துக்கு நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 40000 பொதுமக்கள் உயிரிழக்கவில்லை எனவும், 7000 முதல் 8000 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் எனவும் நெசர்பே பிரபு தெரிவித்திருந்தார். இலங்கை தொடர்பில் குற்றம் சுமத்தி வரும் தரப்பினருக்கு நெசர்பே பிரபுவின் கருத்தை பதிலடியாக கொடுக்க முயும் என திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.