குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் முறை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்கள் நேற்று கலந்தாலோசித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இது தொடர்பிலான சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
வேட்பு மனு கோரப்பட்டுள்ள 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் சார்பில் வேட்பாளர்களை களமிறக்குவது என கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது. வேட்பு மனுக்கள் எதிர்வரும் 4ம் திகதிக்கு முன்னதாக தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என கூட்டு எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.