168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலநிலை சீர்கேடு தொடர்பில் தேவையற்ற பீதி கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார். சில தரப்பினர் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சூறாவளி காற்றோ அல்லது சுனாமியோ ஏற்படக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கால நிலைமைகள் குறித்து தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Spread the love