Home இலங்கைஐ.நா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை

ஐ.நா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு பிரித்தானியா கோரிக்கை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானியா கோரியுள்ளது. ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு பயணம் செய்திருந்த போதும் இந்த விடயம் பற்றி தாம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை முழு அளவில் இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதனை தாம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய முயற்சிகளுக்கு பிரித்தானியா முழு அளவில் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More