இந்தியாவின் கன்னியாகுமரி அருகே கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேவேளை தென் தமிழகத்தில் அடுத்த 36 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.