Home இலங்கையாழில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

யாழில் போதைப்பொருள் வியாபாரிகள் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஹெரோயின் போதைப் பொருளை வியாபார நோக்கத்துக்காக வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டனர் என்று யாழ்ப்பாணம்  கா வல்துறையினர் தெரிவித்தனர்.

திருநகர் பகுதியைச் சேர்ந்த 27, 33 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருளான ஹெரோயின் பக்கற்றுக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டன.  குறித்த பைக்கெட்டில் இருந்த 690 கிராம் எடையுள்ள அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும் என கா வல்துறையினர் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர்’ என்று  கா வல்துறையினர்  மேலும் கூறினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More