குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பியர் வகைகளுக்கு வரிச் சலுகை வழங்குவதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மதுபானம் மற்றும் பியர் வகைகளுக்கு வரிச் சலுகை வழங்கப்படுவதனை தாம் விரும்பவில்லை என பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பியர் வகைகளுக்கு வரிச் சலுகை அறிவிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிகரட் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.