Home இலங்கைஈழ மக்கள் ஜனநாயக் கட்சி கட்டுப்பணத்தை இன்று செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி கட்டுப்பணத்தை இன்று செலுத்தியது.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சாவகச்சேரி நகர சபை தவிர்ந்த யாழ். மாவட்ட ஏனைய 16 உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி இன்று செலுத்தியது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) மேலதிக நிர்வாகச் செயலாளர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) உள்ளிட்டோர் அடங்கிய கட்சியின் உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டச் செயலக தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில்  கட்டுப்பணத்தை செலுத்தினர்.  கடந்தமாதம் 28ஆம் திகதி சாவகச்சேரி நகரசபைக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More