குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவின் வீர வீராங்கனைகள் குளிர்கால ஒலம்பிக் போட்டிகளில் சுயாதீனமாக பங்கேற்பதனை தடுக்கவில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ரஸ்யா உத்தியோகபூர்வமாக பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து குறித்த சட்ட விதிகளை மீறியதாகத் தெரிவித்து ரஸ்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஊக்க மருந்து பயன்பாட்டை ரஸ்யா ஊக்குவிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீர வீராங்கனைகள் சுயாதீனமாக போட்டிகளில் பங்கேற்பதனை தடுக்கவில்லை எனவும் அதற்கு தடை ஏதும் கிடையாது எனவும் ரஸ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.