குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கனடா உதவிகளை வழங்க உள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இதனைத் தெரிவித்துள்ளார். அண்மையில் கிளிநொச்சிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பேண்தகு பொருளாதாரத்தின் ஊடாக வடக்கில் நல்லிணக்கத்தையும் புனர்வாழ்வையும் ஏற்படுத்த பங்களிப்பு செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அது மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.