கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட கூலித் தொழிலாளியான காமராஜ் என்பவருக்கு திருச்சி மகளிர் நீதிமன்றம 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
திருச்சியில் 51 வயதான மேற்படி கூலித்தொழிலாளிக்கு நிலத்தகராறு காரணமாக ஒருவரை கொலை செய்த வழக்கில் காமராஜூக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை முடிந்து வெளியேவந்த காமராஜ், மீண்டும் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், அவர்மீது 2014ஆம் ஆண்டு பலாத்கார புகார் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தநிலையில் நேற்றை தினம் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ள்ளது. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் காமராஜூக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை,1000 ரூபா அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அபராதத்தை செலுத்தத் தவறினால் ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ஓராண்டு கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.