எதிர்வரும் 10ம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில், மாபெரும் பேரணி நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரை காலமும் காலமும் தனித்து நின்று பல போராட்டங்களை நடாத்திய தாம் இம்முறை மக்களின் ஆதரவுடன் இப் பேரணியை நடாத்தவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்
இவ்வாறான ஆதரவுகள் மூலமே எமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கும் அரசிற்கும் கொண்டு சேர்க்க முடியுமெனத் தெரிவித்த அவர் முக்கியமாக ஊடக நண்பர்களின் பங்குபற்றல்களையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் தொடர்பில் பல தடவகைள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியும் அது எந்தளவிற்கு வெற்றி பெறும் என்பது ஒரு கேள்விக் குறியாகவே உள்ளதெனத் தெரிவித்த அவர் அப்படி காரியாலயங்கள் அமைக்கப்படுமாயின் அது தமது மாவட்டத்திலும் அமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களிலுள்ள பெண்கள்தான் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.