குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு வழிகளில் நலன் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனரமைப்பு, புனர்;வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் ஜே.வி.பி கட்சியினர் எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சு உரிய முறையில் வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்கவில்லை என ஜே.வி.பி குற்றம் சுமத்தியிருந்தது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சுவாமிநாதன் யுத்தம் காரணமாக அழிவடைந்த வீடுகள் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாகவும் வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற புள்ளி விபரங்களின் அடிப்படையில் குற்றம் சுமத்தப்பட்டாலும் இந்த புள்ளி விபரங்களில் உண்மையிருக்காது எனவும் தமது அமைச்சு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரியளவில் சேவையாற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.