குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்படுவதனை தாம் எதிர்த்தாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பிணைமுறி மோசடிகளே அரசாங்கத்தின் மீதே ஒரே கரும்புள்ளி என குறிப்பிட்டுள்ள அவர் அர்ஜூன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுனராக நியமிப்பதனை தாம் எதிர்த்ததாகவும், அவ்வாறு நியமிப்பதனால் அரசாங்கத்தின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் என கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நல்லாட்சி மீதான நம்பிக்கையை சிதைக்காத வகையில் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் என்றால் இவ்வாறான விசாரணைகள் நடத்தப்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.