அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் தென்மேற்கு பகுதியில் நேற்று 5.0 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
அலாஸ்காவின் அத்கா நகரின் தென்மேற்கு பகுதியில் சுமார் 83 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 46.8 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. க
கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பிய போதும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அத்துடன் உயிரிழப்பு, சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை.