குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சேர் ஜோன் கொதலாவல பாதுகாப்பு கல்லூரியில் மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதனை எதிர்க்கவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் நவீன் டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு பதிலீடாக ஒர் மருத்துவ கல்லூரியை உருவாக்குவதனை விடவும், கொதலாவல பாதுகாப்பு கல்லூரியில் மாணவர்கள் இணைக்கப்படுவதில் பிரச்சினை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதனை எதிர்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.