குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றியீட்டுவது உறுதி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தாலும் தேர்தலில் வெற்றியீட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சிகள் இணைந்தே எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஈ.பி.ஆர்;.எல்.எப். கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கட்சிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.