குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஸ்பெய்னுக்கும் கட்டலோனியாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமைகள் உக்கிரமடைந்துள்ளன. ஸ்பெய்னின் பிராந்தியமான கட்டலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்ததனைத் தொடர்ந்து இந்த முரண்பாட்டு நிலைமைகள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கட்டலோனிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த அரிய பொருட்கள் ஸ்பெய்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. கட்டலோனியாவின் லிலிடியா அருங்காட்சியகத்தில் இந்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்டை பிராந்தியமான அராகோன் பிராந்தியத்திற்கு சொந்தமான அரும் பொக்கிஸங்கள் சட்டவிரோதமான முறையில் கட்டலோனியாவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை எடுக்கச் சென்ற ஸ்பெய்ன் காவல்துறையினரை கட்டலோனிய மக்கள் தடுக்க முயற்சித்துள்ளனர். இதன் போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.