குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
ஐரோப்பிய நாடுகளும் ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக எற்றுக் கொள்ளும் என அந்நாட்டு பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவைப் போன்றே ஐரோப்பிய நாடுகளும் ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகரான ஏற்றுக் கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நெட்டன்யாகூ தற்போது பிரசல்ஸிற்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக் கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கைப் பொறுப்பாளர் பெட்ரிக்கா மொஹாரனி தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை ஏற்றுக் கொள்வதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் உக்கிரமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.