Home சினிமாதமிழகத்தில் சிபிஎஸ் மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் விஜய்யின் படம்…

தமிழகத்தில் சிபிஎஸ் மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் விஜய்யின் படம்…

by admin


தமிழகத்தில் சிபிஎஸ் மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தில் வேஷ்டி சட்டை தமிழர்களின் கலாச்சாரம் என்ற ஒரு தலைப்பில் விஜய்யின் வேஷ்டி சட்டை புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தில் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் தற்போது அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்கள், இணையங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பொங்கல் விழாவைப் பற்றிய அந்தப் பத்தியில், வேஷ்டி சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் வேட்டி சட்டையுடன் நடந்து நடந்து வரும் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடல் மூலம் மெர்சல் படத்தில் மக்களைக் கவர்ந்து ரசிகர்களின் பெரு வரவேற்ப்பை பெற்ற நாயகனாக விஜய் தன்னை நிலைநிறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More