குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சில அரசியல் கட்சிகளினால் வேட்பு மனுக்களைக் கூட தயாரிக்க முடியவில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜே.வி.வி. கட்சி தற்போதே வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் ஜே.வி.பி கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் மட்டுமே நிராகரிக்கப்படாது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போரின் கவனயீனமே இவ்வாறு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிழையின்றி வேட்பு மனுக்களைக் கூட தயாரிக்க முடியாதவர்களிடம் எவ்வாறு ஆட்சி அதிகாரத்தை வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.