பெங்களூரில் நடக்கும் புதுவருட கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சன்னி லியோன் கர்நாடகா செல்ல திட்டமிட்டு இருந்தார். இந்தக் கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்ளக் கூடாது என கன்னட அமைப்புகள் இரண்டு நாட்களாக போராடி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக ரக்ஷன வேதிகே யுவ சேனை அமைப்பின் தலைவரான ஹரிஷ் இதற்கு எதிராக தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சன்னி லியோன் ஊருக்குள் கால் வைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளதுடன், தன்னுடைய தொண்டர்கள் சிலரும் தன்னுடன் தற்கொலை செய்து கொள்வார்கள் எனக் கூறியுள்ளார். இதனால் தற்போது கர்நாடகாவில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் இந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரில் நடக்க இருக்கும் ‘சன்னி நைட்ஸ்’ புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள சன்னி லியோன் அழைக்கப்பட்டு இருந்தார். இந்த கொண்டாட்டத்தில் அதிக இளைஞர்கள் கலந்து கொள்ளும் வகையில் அதிக அளவில் வித்தியாசமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விளம்பரங்கள் பெங்களூர் முழுவதுமாக, அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டன. இதன் காரணமாக ரக்ஷன வேதிகே யுவ சேனை என்ற அமைப்பு சன்னி லியோனுக்கு எதிராக குரல் கொடுத்தது. சன்னி லியோன் பெங்களூரில் கால்பதிக்கக் கூடாது என போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் பெரிய அளவில் கர்நாடகாவின் பல பகுதிகளில் நடந்தது. மேலும் இதனால் பெங்களூர் மக்களின் கலாச்சாரம் பாதிக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
இந்த பிரச்சனை இரண்டு நாட்களாக தொடர்ந்தது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் பிரச்சனையின் தன்மையை உணர்ந்த கர்நாடக அரசு சன்னி லியோன் பெங்களூருக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்தது. மேலும் அந்த நிகழ்வுக்கும் கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.