Home இலங்கைஉள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறும்

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2018 ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7, 8, 10 மற்றும் 12ம் திகதிகளில் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நிர்ணயிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இந்த மாதம் 26ம் திகதி வெளியிடப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும் தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More