குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாடசாலை பாடவிதானத்திலிருந்து வரலாறு பாடம் நீக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. பாடசாலை பாட விதானத்தில் வரலாறு பாடம் நீக்கப்பட உள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
வரலாறு பாடத்தை வரையறுக்கவோ அல்லது இல்லாமல் செய்யவோ எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை பாடவிதானத்தில் உள்ளடக்கப்படும் பாடங்களில் சில திருத்தங்கள் செய்யப்படுவது வழமையானதாகும் என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பாடத்தை ரத்து செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.