குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெளிவிவகார கொள்கை காரணமாகவே ரஸ்யா, இலங்கைத் தேயிலையை நிராகரித்துள்ளதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ரஸ்ய அரசாங்கம் இலங்கைத் தொடர்பில் கடுமையான கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ரஸ்யா, இலங்கைத் தேயிலையை தடை செய்தமை உக்கிர பிரச்சினையாக உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ரஸ்யாவின் தேயிலை ஏற்றுமதியில் 25 வீதத்தை இலங்கை நிரம்பல் செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாகவே சர்வதேச ரீதியில் இவ்வாறான நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.