குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள் எனவே அவா்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் தலைமையையும் விட்டுக்கொடுக்கத் தயார் என வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சியில் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவா் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இந்த முறை தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும். இன்றும் காலங் கடந்து விடவில்லை மாறுபட்டு தேர்தல் கேட்கின்றவா்கள் ஒன்றாக வந்தால் நான் தலைமையையும் விட்டு்க்கொடுக்கத் தயார். தெரியாத ஊருக்கு பாதை காட்டுவதனை விடுத்து தெரிந்த ஊருக்கு பாதை காட்டுவோம் எல்லோரும் வாருங்கள் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினம்(20) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜன முன்னணியும் முன்னாள் வட மேல் மாகாண முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் சமரகோண் கிளிநொச்சியில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.