குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெருசலேம் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளை அமெரிக்கா மறைமுகமாக மிரட்டியுள்ளது. இஸ்ரேலின் தலைநகராக அண்மையில் ஜெருசலேம் நகரை அமெரிக்கா அறிவித்திருந்தது. அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் இது தொடர்பில் அறிவித்திருந்த நிலையில் ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அமெரிக்காவிற்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட உள்ளது.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகள் கண்காணிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டியுள்ளது. எந்தெந்த நாடுகள் எமக்கு எதிராக வாக்களிக்கின்றன என்பதனை கண்காணிக்குமாறு ஜனாதிபதி ட்ராம்ப் பணிப்புரை விடுத்துள்ளார் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதி நிக்கி ஹெலே (Nikki Haley) தெரிவித்துள்ளார்.