Home உலகம்அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வீதியை கடந்த பாதசாரிகள் மீது கார் மோதியதில் 14 பேர் காயம்:-

அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர வீதியை கடந்த பாதசாரிகள் மீது கார் மோதியதில் 14 பேர் காயம்:-

by admin

அஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வீதியை கடந்த பாதசாரிகள் மீது திடீரென கார் ஒன்று மோதியதில் 14 பேர் காயடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் நகரின் பிளிண்டர்ஸ் வீதிப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்தவிபத்தின் போது பாதசாரிகள் சிலர் தூக்கி வீசப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குஅனுப்பி வைத்துள்ளதுடன் காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளில் இதுபோல் மக்கள் மீது தீவிரவாதிகள் வாகனத்தை மோதி தாக்குதல் மேற்கொள்வதனால் இதுவும் அத்தயைதொரு தாக்குலாக இருக்கமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More