குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர கணிதபாட வினாத்தாள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இம்முறை கணித பாட வினாத்தாள் மிகவும் கடினமாக காணப்பட்டது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன கணிதபாட வினாத்தாள் கடினமானது என குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் மாணவர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது குறித்து கவனம் செலுத்தப்படும் என குறிப்பிட்டுள்ள கல்வி அமைச்சர் பரீட்சை வினாத்தாள்கள் இலகுவானதாக அமையாது என குறிப்பிட்டுள்ளார். பரீட்சை வினாத்தாள் கடினமாக இருந்தது எனவும் போதியளவு நேரம் ஒதுக்கப்படவில்லை மாணவர்கள் முறைப்பாடு செய்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது குறித்து பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாட உள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.