குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இனவாதத்தை தூண்டும் வகையிலான சமூக ஊடகப் பயன்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இனவாத அல்லது மதவாத அடிப்படையில் குரோதத்தை தூண்டும் வகையில் சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் சுயாதீனமானதும் நீதியானதுமான அடிப்படையில் தேர்தலை நடாத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை இது ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என சுட்டிக்காட்டியுள்ள சாகல ரட்நாயக்க இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி இலகு வெற்றியீட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு பொலித்தீன் வகைகளை பயன்படுத்தக் கூடாது என கட்சி ஆதரவாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.