பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பரேலி பல்கலைக்கழகம் கௌரவ கலா பட்டம் வழங்கி கவுரவிக்கவுள்ளது.
2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் கடமையாற்றி வருகிறார்.
அவரைப் பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் நாளை கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்க உள்ளது. மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உத்தரப்பிரதேசம் மாநில நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர்.