இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகப்புத்தகத்திலிருந்து வலி வடக்கு தொடர்பான தவறான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. எல்.ரி.ரியினரின் பயங்கரவாத நடவடிக்கைகளினால் அகதிகளாக்கப்பட்ட வலி வடக்கு மக்கள் என்ற தவறான சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தார். இதன்போது வலி வடக்கில் காங்கேசன்துறையில் உள்ள 100 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோக முகப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட பதிவிலிலேயே மேற்கண்ட தவறான தகவல்கள் இடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முகப்புத்தகத்தில் எதிர்ப்புக்கள் முன் வைக்கப்பட்டன. இதனையடுத்து தவறான சொற்கள் நீக்கப்பட்டுள்ளன.
வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்று அழைக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடம் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய பதிவு
https://globaltamilnews.net/archives/5619
முழுப்பூசனிக்காயை சேற்றில் மறைக்கலாமா?