ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நிராகரித்துள்ளார். கல்வி பொதுதரா தர பரீட்சையின் வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுவதன் காரணமாக தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பிப்புக்காக கால எல்லையை மேலும் ஒரு வார காலம் நீடிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், வேட்பு மனுக்கள் தொடர்பான அறிவித்தல் கடந்த 4ஆம் திகதி வெளியிடப்பட்ட அன்றே தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால எல்லை குறித்து பாடசாலைகளுக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய முன்னரேயே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காலஎல்லையை நீடிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.