கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூர் இந்தியாவில் முதன்முறையாக தனக்கென்று தனிச்சின்னம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த சின்னத்தினை பெங்களூரு வளர்ச்சித்துறை அமைச்சர் நேற்றையதினம் வெளியிட்டுள்ளார். . பெங்களூரு நகரின் கலை, இலக்கியம், பண்பாட்டை குறிக்கும் வகையில் இந்தச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவின் புகழை உலக முழுவதும் பரப்பும் விதமாக இந்த சின்னம் வெளியிடப்பட்டதாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
குறித்த சின்னத்தில் பெங்களூரு என்ற ஆங்கில வார்த்தையின் முதல் இரண்டு எழுத்துகளும், கடைசி எழுத்தும் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இது பெங்களூரு நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க், நெதர்லாந்தின் ஆர்ம்ஸ்ரடாம் போன்ற உலகில் பல முக்கிய நகரங்கள் தனக்கென தனி லோகோ வைத்துள்ளன. அதன் வரிசையின் பெங்களூருவும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.