குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கனகபுரம் பகுதியில் இன்று(26) விசேட அதிரடி படையினரால் 10.645 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலிற்கமைய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அதிரடிப்படையினர் இணைந்து இன்று மூன்று மணியளவில் நடத்திய சோதனையின் போதே மோட்டர் சைக்கிளில் கடத்தப்பட்ட குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேகத்தின்பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதியும், சந்தேக நபர்களையும் கிளிநொச்சி காவல்துறையிடம் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர். நாளை(27) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.