வட்ஸ்அப் செயலியில் உள்ள நடுவிரல் எமோஜியை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் சட்ட அறிவிப்பு மூலம் கேட்டு கொண்டுள்ளார். வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களுக்கு இடையே வழங்கப்படும் எமோஜிக்களில் நடுவிரல் எமோஜியை மட்டும் நீக்க வேண்டும் என புதுடெல்லியை சேர்ந்த குர்மீத் சி்ங் எனும் வழக்கறிஞர் விளக்கம் கேட்டு சட்ட ரீதியான ஆவணம் அனுப்பியுள்ளார்.
இந்தியாவில் நடுவிரல் காண்பிக்கும் முறை அவமதிப்பு, சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்த்தரமான சைகை என குர்மீத் சிங் அனுப்பியுள்ள ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 கீழ் மற்றவர்களை அவமதிக்கும், சண்டையிட தூண்டும், ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பெண்களிடம் பயன்படுத்துவது குற்றம் ஆகும். இதேபோன்று மற்றவர்களிடம் பயன்படுத்துவம் சட்ட விரோத நடவடிக்கை தான். என குர்மீத் சிங் சட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் வட்ஸ்அப் செயலியில் நடுவிரல் எமோஜி வழங்குவதன் மூலம் தண்டனைக்குரிய, சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட வட்ஸ்அப் நேரடியாக உடந்தையாக இருக்கிறது. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வலைத்தளங்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வரும் எமோஜி என்பது டிஜிட்டல் புகைப்படம் அல்லது ஐகோன் எனலாம். இதனைக் கொண்டு உணர்வுகளை மிக ஆழமாக வெளிப்படுத்த முடியும். வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது எமோஜி கருத்துக்களை மிக ஆழமாக வெளிப்படுத்தும்.
அந்த வகையில் வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள நடுவிரல் எமோஜியை சட்ட அறிவிப்பில் உள்ள திகதியில் இருந்து 15 நாட்களுக்குள் நீக்க வேண்டும் என்றும், நீக்காத பட்சத்தில் இவ்விவகாரம் குறித்து குற்றவியல் வழக்கு தொடரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.