Home இலங்கை“நீங்கள் நினைப்பது போல் திருப்பி அழைக்கவில்லை. இடமாற்றம் பெற்றே செல்கின்றேன்.” ஆ.நடராஜன்:-

“நீங்கள் நினைப்பது போல் திருப்பி அழைக்கவில்லை. இடமாற்றம் பெற்றே செல்கின்றேன்.” ஆ.நடராஜன்:-

by admin

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தான் இடமாற்றம் பெற்றே செல்வதாகவும், தன்னை மீள அழைத்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இந்திய துணைத்தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். யாழில்.உள்ள இந்திய துணைத்தூதரக துணை தூதுவரை அரசியல் அழுத்தம் காரணமாக மீள அழைத்து உள்ளதாக இணையங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், திருப்பி அழைக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை. நான் இங்கு மூன்று வருடங்கள் கடமையாற்றி விட்டமையால் இடமாற்றம் பெற்றே நான் இந்தியா செல்லவுள்ளேன். என்னை யாரும் திருப்பி அழைக்கவில்லை. இடமாற்றம் பெற்றே செல்கின்றேன்.

அரசியல் அழுத்தம் காரணமாக தான் இடமாற்றம் பெற்றேன் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதிலும் உண்மையில்லை. கண்டியில் உள்ள துணைத்தூதரகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் இங்கு வருவார் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன. அதிலும் எந்த உண்மையும் இல்லை. என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More