எதிர்வரும் உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோத சம்பவங்கள் குறித்து, 5 முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
அந்த 5 முறைப்பாடுகளும் சாவகச்சேரி, பருத்தித்துறை, உடுவில், சண்டிலிப்பாய் மற்றும் வேலனை ஆகிய பிரதேசங்களில் இருந்து கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பொது இடங்களில் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து, 3 முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமாக ஒரு கட்சி அலுவலகத்தில் நுழைந்தமை தொடர்பாக தலா ஒவ்வொரு முறைப்பாடுகளும், கிடைத்திருப்பதாக கூறியுள்ள மாடவட்ட செயலாளர், யாழ். மாவட்டத்தில் வேறு தேர்தல் விதிமீறல்கள் குறித்து பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கிடைத்துள்ள முறைப்பாடுகள் குறித்து யாழ்ப்பாணம் காவற்துறையின் ஊடாக விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறிய அவர், யாழ். மவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளருக்கும் தேர்தல் சட்ட விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.