குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முதனிலை டென்னிஸ் வீரர்களான அண்டி மரே மற்றும் நவொக் டுஜொவிக் ஆகியோர் உபாதைகளிலிருந்து மீண்டுள்ளனர். இரண்டு முதல் தர வீரர்களும் அண்மைய மாதங்களில் உபாதை காரணமாக டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகியிருக்க நேரிட்டது. எனினும் இந்த புத்தாண்டில் உடல் தகுதியை வலுப்படுத்திக் கொள்வதே பிரதான இலக்கு என தெரிவித்துள்ளனர்.
அண்டி மரே கடந்த ஜூலை மாதம் முதல் உபாதையினால் பாதிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. உபாதை எதுவுமற்ற காலங்களில் எத்தனை வெற்றிகளை குவிப்பது என்ற மனோ நிலையில் விளையாடினாலும் தற்போது உடல் தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதுடன் உபாதைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதே முதனிலை நோக்கம் என மரே தெரிவித்துள்ளார்.
மரே, இம்மாதம் 31ம் திகதி நடைபெறவுள்ள, பிரிஸ்பென் சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டுஜொவிக்கும் உபாதைகளிலிருந்து மீண்டு சிறந்த திறமைகளை வெளிப்படுத்த உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.