யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட சிகிச்சையியற் துறைக்கான கட்டடத் தொகுதிக்கு, அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று நடைபெற்றது. எட்டு மாடிகளை கொண்ட, மருத்துவ பீட சிகிச்சையியற் துறை கட்டடத் தொகுதியானது, 700 மில்லியன் ரூபா செலவில் கட்டப்படவுள்ளது. இந்தப் பாரிய பணி எதிர்வரும் இரண்டு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய அடிக்கல் நாட்டு நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி சுப்ரமணியம் ரவிராஜ், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.நந்தகுமார், யாழ்.போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரி.சத்தியமூர்த்தி, யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் மற்றும் மருத்துவ பீட விரிவுரையாளர்கள், அலுவலர்கள் என பல்கலைக்கழக சமூகத்தினரும், நிபுணர்களும் கலந்துகொண்டனர்.