குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
இணைப்பு2 – திஸ்ஸ அத்தநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் போலிக் கையெழுத்துக்களை பயன்படுத்தி ஆவணம் தயாரித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றில் கோரியிருந்த போதும் இந்தக் கோரிக்கையை நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்த திஸ்ஸ அத்தநாயக்கவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும்
Nov 4, 2016 @ 05:54
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தாநாயக்கவிற்கு பிணை வழங்குவது குறித்து இன்று தீர்மானிக்கப்பட உள்ளது. போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை மனு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது திஸ்ஸ அத்தநாயக்க நீண்ட காலமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே அவருக்கு பிணை வழங்குமாறும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். கையொப்பங்கள் போலியானவை என அரச ஆய்வாளர்கள் கூறவில்லை எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறெனினும், திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு பிணை வழங்குதவற்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.