Home சினிமாஇமானின் 100-வது படம் குறித்த அறிவிப்பு

இமானின் 100-வது படம் குறித்த அறிவிப்பு

by admin


இசையமைப்பாளர் டி.இமான் தனது 100-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிருஷண்தாஷி என்ற சின்னத்திரை தொடர் மூலம் இசையமைப்பாளராக டி.இமான். அறிமுகமாகியிருந்தார். தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களுக்கு இசையமைத்து வந்த இமான், விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்த இமான், மைனா படத்தின் மூலம் ரசிகர்களை தனது இசையால் கட்டிப்போட்டார்.

மைனா படத்திற்கு பின்னர் அவரது இசையில் வெளியான பெரும்பாலான படங்களின் பாடல் அல்பங்கள் பிரபல்யமாகின. இந்நிலையில், இமானின் 100-வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.  சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் டிக் டிக் டிக் படம் தான் இமானின் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தவiயில் 100-வது படம் என்ற மைல்கல்லை தொட்ட இமானுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கிள் டிரக் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வ எதிர்வரும் ஜனவரி 4-ஆம் திகதி நடைபெற இருக்கிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More