Home இலங்கையாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்

யாழ்ப்பாணத்தில் மர்ம மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் பதிவான மர்ம மரணங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களில் மர்மமான முறையில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்தநிலையில் பேய் பூதங்களினால் இவ்வாறான மரணங்கள் சம்பவிப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், இந்த மரணங்கள் அனைத்திற்குமே என்ன காரணம் என்பது பற்றிய தெளிவான விளக்கங்களை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணங்களுக்கான மருத்துவ காரணங்களும், மருத்துவ சான்றுகளும் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே அண்மைய மர்ம மரணங்கள் பற்றி பீதி கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More